விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு ; குடும்பத்தினர் 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை

வியாழன், 9 நவம்பர் 2017 (15:34 IST)
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


கரூா் மாவட்டம், கடவூர் வனத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவா் புகழேந்தி(45). இவரது மனைவி மலா்கொடி (33),  மகன் சுகன்ராஜ்(12).  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு பணி முடிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் புகழேந்தி. அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.  
 
இந்த விபத்தில் புகழேந்தியின் இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள பகுதிகள் செயல்படாமல் போனது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவா் படுத்த படுக்கையாக இருந்தார். வேலைக்கும் செல்ல முடியாமல்,  போதிய வருமானமும் இல்லாமல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு சிரமம் கொடுத்து வருவதாக புகழேந்தி மனம் உடைந்தார்.
 
இந்நிலையில், இன்று அதிகாலை புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகனுடன் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.  
 
தகவலறிந்து பசுபதிபாளையம் போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனா்.  
 
புகழேந்திக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின்னா் மலா்கொடி கூலி வேலைக்கு சென்று வந்ததாகவும், சுகன்ராஜ் ஜெகதாபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் தெரிகின்றது. 

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்