மும்பையில் நடந்து வரும் படப்படிப்பில், அனில் கபூர், ராஜ்குமார் ராவ் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் அப்துல் மஞ்சுரேக்கர் இயக்குகிறார். ஹாலிவுட் படமான ‘எவரியடிஸ் பேமஸ்’ ரீமேக்கான இந்த படத்தில் ஐஸ்வர்யா ஒரு கால் டாக்சியை பொது இடத்தில் நின்று கூப்பிடுவது போல ஒரு காட்சி புளோரா பவுண்டேசன் என்னும் இடத்தில் எடுக்கப்பட்டது. தொலைவில் இருந்து இக்காட்சியை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று பெண் உதவி இயக்குநர் மீது மோதியது. இதனால் உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.