தாத்தா, பாட்டிகளுக்கு பேரன் செய்யும் கடமை இது!- அமைச்சர் உதயநிதி

திங்கள், 24 ஜூலை 2023 (21:54 IST)
அமைச்சர் உதயநிதி, ''மாவட்ட கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகளுக்கு என் கையால் இதுவ்ரை 30 கோடி ரூபாயை வழங்கியுள்ளேன். பேரன் தன் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் செய்கிற கடமையாகப் பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100 வது பிறந்த நாளையொட்டி, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உத நிதி ஸ்டாலின், கலைஞர் 5  முறை தமிழ் நாட்டின் முதல்வராக அமர்ந்ததற்கு காரணம் கழக முன்னோடிகள்தான். மாவட்ட கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகளுக்கு என் கையால் இதுவ்ரை 30 கோடி ரூபாயை வழங்கியுள்ளேன். பேரன் தன் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் செய்கிற கடமையாகப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்