தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்..? பிரேமலதாவுடன் எடப்பாடி ஆலோசனை..!

Senthil Velan

வியாழன், 21 மார்ச் 2024 (12:23 IST)
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக அதிமுக, தேமுதிக இடையே மூன்று கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிரமலதா, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தேமுதிகவுக்கு திருவள்ளூா் (தனி), மத்திய சென்னை, கடலூா், தஞ்சாவூா், விருதுநகா் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 
 
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்தார். அங்கு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும், பிரேமலதாவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என பிரேமலதா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

ALSO READ: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கோடை விடுமுறை அறிவிப்பு..!!
 
ஆலோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும், பிரேமலதாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்