பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. சிறப்பு ஏற்பாடுகள்..!

Siva

வியாழன், 23 மே 2024 (09:32 IST)
திருவண்ணாமலையில் இருக்கும் உலக புகழ்பெற்ற அருணாச்சல ஈஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று நடக்கும் கிரிவலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில் நேற்று இரவு 7.09 மணிக்கு ஆரம்பித்த கிரிவலம் இன்று வரை நடைபெற இருப்பதை எடுத்து நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் என்பதும் இரவோடு இரவாக லட்சக்கணக்கான பக்தர் கிரிவலம் வந்ததாகவும் தெரிகிறது.

உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் கிரிவலம் முடித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய 4 மணி   நேரத்திற்கு மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததாகவும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் பிஸ்கட் மோர் ஆகியவை வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு 7:4 34 மணிக்கு கிரிவலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்