ராமலிங்க சுவாமி - சௌடாம்பிகையம்மன் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு - உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன்!

J.Durai

புதன், 22 மே 2024 (15:32 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இ.கோட்டைபட்டி கிராமத்தில்  ராமலிங்க சுவாமி - சௌடாம்பிகையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
 
இந்த கோவிலின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து வரும் போது கத்தியால் உடலில் வெட்டிக் கொள்ளும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
 
50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உத்தப்புரம் முருகன் கோவிலில் இருந்து கரகத்தை ஊர்வலமாக எடுத்து வரும் போது உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்திவாறு கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
 
முன்னதாக அம்மாபட்டி கிராம மக்களும் கரகம் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்., அவர்களும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டு விநோத நேர்த்திக் கடனை செலுத்தி ஓம் சக்தி,பராசக்தி என்ற கோசங்களை எழுப்பியவாறு கரகத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 
இந்த திருவிழாவில் இரு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்