ஏவுகணையை ஏவுகிற ஜெயக்குமார் ஓடி ஒளிந்தது ஏன்? திருநாவுக்கரசர் காட்டம்!

வெள்ளி, 20 ஜூலை 2018 (18:01 IST)
தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இணைந்து பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எதிர்த்துள்ளது. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து பின்வருமாறு பேசியுள்ளார். மத்திய பாஜக அரசை எதிர்த்து கடுகளவு எதிர்ப்பையும் காட்ட அதிமுகவுக்கு துணிவில்லை என்பதையே நம்பிக்கையில்லாத் தீர்மான எதிர்ப்பு முடிவு காட்டுகிறது.
 
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற வருமானவரி சோதனைகளில் கொத்து கொத்தாக, மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 
 
இதில் சம்பந்தப்பட்ட அரசு ஒப்பந்தக்காரர்கள் அதிமுக தலைமைக்கு மட்டுமல்ல, முதல்வருக்கும் உறவினர்களாக இருப்பதால் பாஜகவை எதிர்க்கிற துணிவை எதிர்பார்க்க முடியாது. 
 
மடியில் கனம் இருப்பதால் பாஜகவிடம் மண்டியிட்டு ஆதரிக்க வேண்டிய அவலநிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைவிட அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. அனைத்திருக்கும் ஏவுகணையை ஏவுகிற அமைச்சர் ஜெயகுமார் இப்போது எங்கு ஓடி ஒளிந்தார் என கேல்வி எழுப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்