ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தது உண்மை.. திருநாவுக்கரசின் பழைய அறிக்கை வைரல்..!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (09:16 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் பிடித்து இழுத்தார்கள் என சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு அப்போது எம்எல்ஏவாக இருந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் விளக்கம் அளித்தபோது ஜெயலலிதா சேலையை பிடித்து யாரும் இழுக்கவில்லை என்றும் அது ஒரு கற்பனை என்றும் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் சேலையை அப்போதைய அமைச்சர் துரைமுருகன் பிடித்து இழுத்தார் என்றும் மந்திரிகள் எல்லோரும் துச்சாதனராக நடந்திருக்கிறார்கள் என்றும்  துரியோதனர்கள் விரைவில்  அழிவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். 
 
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் அப்போது ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்ததாக கூறிய திருநாவுக்கரசு இப்போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறுவது ஏன்? ஒரே ஒரு எம்பி தொகுதிக்காக மாற்றி பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்