ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடந்தது உண்மைதான்: எடப்பாடி பழனிசாமி

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை திமுக எம்எல்ஏக்கள் தாக்கினார்கள் என சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அப்படி ஒரு சம்பவம் சட்டமன்றத்தில் நடைபெறவே இல்லை என்றும் வாட்ஸ் அப் செய்திகளை வைத்து நிர்மலா சீதாராமன் பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என்றும் கூறினார் 
 
 இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்த நிலையில் 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் கொடூரமான முறையில் தாக்குதல் நடந்தது உண்மைதான் என்றும் பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது தாக்குதல் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். 
 
அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது என்றும் 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் இந்த தாக்குதல் நடைபெற்ற போது நானும் அங்கு இருந்தேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்