2026ஆம் ஆண்டு மார்சில் திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும்.
சனீஸ்வர பகவானை தரிசிக்க, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்று கூறப்படுவதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை தெளிவுபடுத்தும் வகையில், திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் தனி அதிகாரி சோமசேகர் அப்பாராவ் உத்தரவின் பேரில், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
"சனிப்பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்பது ஒரு தவறான தகவல். திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்க முறையை பின்பற்றுகிறது. அந்த கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில்தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.