திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று: அரசு மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 28 ஜூலை 2020 (15:46 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் 7000ஐ நெருங்கியுள்ள கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மேலும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட பல அரசியல்வாதிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காவல்துறையினர் மருத்துவர்கள் உள்பட பல துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக சளி இருமல் போன்ற ஒரு அறிகுறி இருந்ததை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு பாசிட்டிவ் என்று உறுதி செய்துள்ளதாகவும் இதனால் அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா என்ற செய்தியை அவரது இயக்கத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்