உதயசூரியனில் போட்டி – என்ன முடிவெடுத்திருக்கிறார் திருமாவளவன் ?

திங்கள், 11 மார்ச் 2019 (14:22 IST)
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது திமுக. ஆனால் அதுகுறித்த முடிவை இன்னும் எடுக்காமல் உள்ளது விசிக.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடத்திய திமுக அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது. ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் ஸ்டாலின் விதித்த மற்றொரு நிபந்தனையால் திருமாவளவன் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு இப்போது உதயசூரியனின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அவர்கள் கட்சிக்குள்ளாகவே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த தேர்தல்களில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட மோதிரம் சின்னத்தை இம்முறை ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். அந்தக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதால் மோதிரத்தை அக்கட்சிக்கே வழங்கியது.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் ‘திமுக  அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறது. நிலையான சின்னம் இல்லாத கூட்டணிக் கட்சியினர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றால் வெற்றி எளிதாகும் என நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை `2006, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009, 2014 மக்களவைத் தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுள்ளோம். கல்வியறிவு அதிகரித்திருப்பதால் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால் இதுவரை திமுகவின் வேண்டுகோள் குறித்து

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்