ரகசியங்களை வெளியிடுவது திமுகவின் வாடிக்கை : தம்பிதுரை

சனி, 9 மார்ச் 2019 (17:03 IST)
எங்களுக்கு உதவி செய்ததாக கூறலாமே தவிர தற்போது அதிமுக தான் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது பாரத பிரதமர் மோடி அவர்களும் சரித்திரத்தில் இடம்பெறும் சாதனையை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அந்தத் திட்டங்களை தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார் என்றும் இதனால் தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
 
வலிமை மிக்க இந்த இயக்கம் வரும் இடைத் தேர்தலில் இருபத்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நூத்தி இருபத்தி மூன்று இடங்களைப் பெற்று தந்த அது தற்போது 124 ஆக மாறும் நிலை உள்ளது.

இடைத் தேர்தல் நடத்தாமல் சதித் திட்டம் தீட்டுவதாக மத்திய மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, ஸ்டாலின்தான் சதிதிட்டம் தீட்டுகிறார் ரகசியங்களை வெளியிடுவது திமுகவின் வாடிக்கை என்றும் இலங்கைப் போரின் போது நாட்டின் பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு ஆதரவு அளித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கையில் பரிமாறியதால் தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது ரகசியத்தைக் காப்பாற்ற முடியாத கட்சி திமுக இதனை முக.அழகிரியும் உறுதிப்படுத்தியுள்ளார். 
 
2014 நாடாளுமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது தற்போது இரு முனைப்போட்டி உள்ளதால் கூட்டணி அமைத்து இருக்கிறோம்.
 
2014- பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி மூன்று இடங்களை பிடித்தது தற்போது எங்களது கூட்டணியில் பிஜேபியும் உள்ளதால் வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 
 
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்தார். பேட்டியின் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்