விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருந்தது.. ஆனால்: திருமாவளவன்

Siva

ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (07:49 IST)
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தது என்றும், ஆனால் நாம் இருக்கும் கூட்டணிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் அந்த வாய்ப்பை நான் தட்டிக் கழித்தேன் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிய வாய்ப்பில்லை என்றும், அதில் உள்ள கட்சிகள் தொடர்ந்து கூட்டணிகள் நீடிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு சில அரசியல் விமர்சகர்கள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து விட்டதால், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர வாய்ப்பு இல்லை என்பதால் விஜய் கட்சியுடன் மட்டும் சேர வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ’விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருந்தது, ஆனால் அந்த கூட்டணிக்கான கதவை மூடிவிட்டேன்’ என்றும் தெரிவித்தார். ’பாஜக இருக்கும் கூட்டணியும் சேர மாட்டேன், வேறு எந்த கூட்டணியும் சேர மாட்டோம், எங்களுக்கு பதவி முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம்’ என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்