COVAXIN தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க அரசு முன்வர வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திற்கு 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.
இந்நிலைய்யில் COVAXIN தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க அரசு முன்வர வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்ற போதுமான சோதனைகளை முடிக்காத தடுப்பூசிகளை பயன்படுத்தக் கூடாது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சோதனை வெள்ளோட்டம் பார்க்க மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? சத்தீஷ்கரை போலவே தமிழகத்திலும் COVAXIN தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.