ஆட்சியிலும் பங்கும், அதிகாரத்திலும் பங்கு: திமுகவுக்கு செக் வைக்கிறாரா திருமாவளவன்?

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (12:19 IST)
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோ திடீரென இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து திமுகவுக்கு வைக்கப்பட்ட செக் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்து 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் திடீரென தற்போது மதுவிலக்கு மாநாடு நடத்துவது திமுகவுக்கு வைக்கப்பட்ட செக் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு அதிக சீட் வேண்டும் என்பதை மறைமுகமாக நிர்பந்தப்படுத்தவே மதுவிலக்கு மாநாடு நடத்தப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் திருமாவளவன் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

 இந்த வீடியோ திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூட்டணி பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்