அதிமுகவில் தனபால் தலைமையில் மூன்றாவது அணியா?: மிடியலப்பா சாமி!

சனி, 29 ஏப்ரல் 2017 (12:14 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டாக உடைந்த அதிமுக தற்போது மூன்றாக உடைய உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் மல்லுக்கட்டி வரும் சூழலில் இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தனபால் தலைமையில் ஒரு அணி உருவாகி வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஏற்கனவே நமது தளத்தில் அதிகவில் உள்ள தலித் எம்எல்ஏக்கள் நடத்திய ரகசிய கூட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தோம். அதிமுகவில் உள்ள 28 தலித் எம்எல்ஏக்களும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி விவாதித்தூள்ளனர்.
 
தற்போதையை ஆட்சியை தாங்கி பிடிக்கும் நான்கில் ஒரு தூணாக தலித் எம்எல்ஏக்கள் இருக்கும் போது ஏன் அமைச்சரவையில் போதிய இடம் இல்லை. இரு அணிகள் சேர்ந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்முடைய ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது.
 
நான்கில் ஒரு பங்கு ஆதரவு இருப்பதால் நம்முடைய ஆதரவை வாபஸ் பெற்றாலும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியாது என தலித் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
 
அமைச்சரவையில் தங்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அதிமுகவின் எந்த அணி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் ஆதரவு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவது உறுதியானால், தலித் எம்எல்ஏக்கள் தனியாக போர்க் கொடி தூக்கத் தயாராகி விட்டார்கள். அவர்களை இயக்குவது சபாநாயகர் தனபால் தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்