கேஸே நாங்கதான்.. திருட்டு வழக்கில் பீஸ் கொடுக்க வக்கீலிடமே திருடிய திருடன்!

Prasanth Karthick

புதன், 8 ஜனவரி 2025 (15:56 IST)

கோவை மாவட்டத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கிய திருடன் வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த மற்றொரு திருட்டில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

 

 

கோவை மாவட்டம் புளியகுளத்தை சேர்ந்தவர் 47 வயதான மணிகண்டன். சிறுவயது முதலே தொடர்ந்து சிறு திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மணிகண்டன் மீது அப்பகுதியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களிலும் சிறுசிறு திருட்டு வழக்குகள் உள்ளது.

 

சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் சிக்கிய மணிகண்டன் சமீபத்தில்தான் ஜாமீனில் வந்துள்ளார். இந்த திருட்டு வழக்கில் வாதாடி ஜாமீன் பெற்று தந்த வழக்கறிஞருக்கு கட்டணம் தர தன்னிடம் காசு இல்லாததால் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் மணிகண்டன்.

 

வேறொரு வழக்கறிஞரின் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய செல்போனை திருடி தனது வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த முயன்றபோது மணிகண்டன், கையும், போனுமாக பிடிபட்டுள்ளார். அவரை இந்த திருட்டு வழக்கில் மீண்டும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்