தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சனி, 23 டிசம்பர் 2023 (12:59 IST)
தமிழ்நாட்டில் பெரிய அளவில் இனி மழை பெய்யாது என சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழ்நாடு வெதர்மேனும் கூறியிருக்கும் நிலையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில்  கன மழை பெய்தது. அதேபோல் தென்மாவட்டங்களிலும் மிகப்பெரிய கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது தான் தமிழகம் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு தமிழகத்தில் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்