இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது.
நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,இறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றிற்காக வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளிக்கப்படும். மற்ற எதற்கும் கிடையாது. எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமெனில் அதற்கு 144 தடை உத்தரவு போடவேண்டிய அவசியமே இல்லை. வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நாம் என்னென்ன உதவிகளை செய்தோமோ, அதே உதவிகளை மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். அதற்குண்டான செலவை நம் மாநில அரசு கொடுக்கும் என்றும் தெரிவித்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.