எனவே, திமுக இளைஞர் அணி இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. அதன்படி திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.