தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பியதில் மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து உடனடியாக தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த ஞானநேசன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஞானநேசன் தான் குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த உண்மை வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.