பட்டாசு விபத்துக்கு நிவாரணம் வழங்கியதில் மோசடி! – மக்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (11:43 IST)
கடந்த சில மாதங்கள் முன்னர் சாத்தூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கிய நிவாரண காசோலையில் மோசடி நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக சிவகாசி அருகே சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 27 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பட்டாசு ஆலை நிர்வாகம் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக கூறி அதற்கான காசோலையையும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கியது.

இந்நிலையில் இந்த காசோலைகளை வங்கியில் அளித்த நிலையில் காசோலை கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பணம் இல்லாத காசோலை வழங்கி மோசடி செய்த பட்டாசு ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்