கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த மாவட்டம்! சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேற்றம்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:51 IST)
கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் ஒரு நோயாளி கூட பாதிக்கப்படாத நிலையில் தேனி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் என தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் தேனியும் ஒன்றாக இருந்தது. அதனால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அங்கு மொத்தமாக 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இதுவரை 35 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழக்க, தற்போது 7 பேர் வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக அங்கு கடந்த ஒரு வாரமாக புதிதாக ஒரு நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்