அரசு அதிகாரிகளுக்கு கொள்ளையர்கள் எழுதிய நன்றி கடிதம்

செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:59 IST)
நெல்லையின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் இரவில் பெரும் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இருட்டிய பின்னர் வெளியே வரவே பயப்பட்டனர்.


 


நெல்லையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடமும், அதனை கண்காணிக்கும் பொறுப்பு மாநகராட்சி அதிகாரிகளிடமும் உள்ளது. இருவருமே மெத்தனமாக இருந்த காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் இரவில் செயின்  பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்தன

இந்த நிலையில் சில குசும்பர்கள் 'வழிப்பறி மற்றும் செயின் அறுப்போர் சங்கம்' என்ற பெயரில் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியாததால் எங்கள் தொழிலுக்கு வசதியாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் எங்கள் தொழில் செழிக்கும். அதிகாரிகளுக்கு நன்றி' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்