கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பிரபல டிவி நடிகை போலீசில் புகார்

வியாழன், 26 அக்டோபர் 2017 (15:03 IST)
கந்துவட்டியின் கொடூரம் எப்படிப்பட்டது என்பதை சமீபத்தில் நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளித்து மாண்டதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த சம்பவத்திற்கு பின்னர் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். எனவே கடந்த இரண்டு நாட்களாக கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மீது புகார்கள் குவிந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஆனந்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்துவட்டி குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். தனது உறவினர் ஒருவரிடம் ரூ.5லட்சம் வாங்கிய நிலையில் அவர் தன்னிடம் கந்துவட்டி வசூலிப்பதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
இன்னும் இதுபோல் பல திரையுலகினர் கந்துவட்டி கொடுமையால் சொத்துக்களை இழந்துள்ளதாகவும், அந்த புகார்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளியே வரும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்