சூளையின் அதிபர்கள் கொத்தடிமைகளை கடத்திய சம்பவம் : கரூர் அருகே பரபரப்பு

வியாழன், 24 ஜனவரி 2019 (20:13 IST)
கரூர் அடுத்துள்ள நெரூர் பகுதியில் தனியார் செங்கல்சூளையில் குடும்பத்துடன் கொத்தடிமையாக வேலைபார்த்துவரும் எங்களை காப்பாற்ற கோரி கரூர் சூளையிலிருந்துதப்பிய மகன் கோட்டாச்சியரிடம் மனு அளித்தார்.

கரூர் அடுத்துள்ளது நெரூர், வாங்கல், தண்ணீர் பந்தல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டசெங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்தசூளைகளில் பெரும்பாலான பணியாளர்கள் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரவழைத்து தங்க இடம் சாப்பாடு,மற்றும் நிறைவான சம்பளம் தருகிறோம் என அழைத்துவந்து கொத்தடிமைகளாக வைத்துள்ளனர். 
 
இந்நிலையில்இன்று நெரூர் பகுதியில் செயல்படும் தனியார் செங்கள்சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேகர்மற்றும் அவருடைய மனைவி செல்வி, மகள் விஜி, மகன்காமராஜ் ஆகியோரை கடந்த 15 ஆண்டுகளுக்கு செங்கள்சூளைக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆரம்பகாலத்தில் முறையாக நடத்தி வந்த செங்கல் சூளைஅதிபர்கள் அந்த குடும்பத்துக்கு தேவையான வசதிகள்செய்து கொடுத்துள்ளனர். அப்போது காமராஜிற்க்கு வயது 8 தற்போது வயது 23, இதுவரை பள்ளிக் கூடத்திற்கு கூடஅனுப்பாமல் கடுமையான வேலை வாங்கி வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புகாமராஜரின் தந்தைக்கு பணியின் போது இடுப்பு எழும்புமுறிந்து படுத்தப்படுக்கையாக உள்ளார். அவருக்கு செங்கல்சூளை உரிமையாளர்கள் போதிய சிகிச்சை அளிக்காமல்உள்ளனர்.
 
இது தொடர்பாக சமூக ஆர்வலர்களுக்கும், தலித் விடுதலைஇயக்கத்தினருக்கும் தகவல் தெரிந்து கரூர் மாவட்டஆட்சியரிடம் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்கக்கோரி, சமூக நல ஆர்வலர்களும், தலித் விடுதலைஇயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் தலித் பாண்டியன்கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு கோட்டாச்சியர் சரவணமூர்த்தி சம்பவஇடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துபாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிதொகை மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு மேல்சிகிச்சைஅளிக்க வேண்டும் என்றும் அவர்களை சொந்த ஊர்களுக்குஅனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தை அடித்துஉதைத்து காரில் எங்கள் குடும்பத்தை கடத்தியும் மிரட்டியும்வலுகட்டாயமாக அழைத்து சென்றனர். நான் அதிலிருந்துதப்பித்து எங்கள் குடும்பத்தை மீட்டுத் தரக் கோரி சமூகஆ்ர்வலர்களிடம் காமராஜ் தெரிவித்தார். தொடர்ந்துபாதிக்கப்பட்ட காமராஜ்  உடன் கரூர் கோட்டாச்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்