பூமி பூஜையை தொடங்கி வைத்த விஜயபாஸ்கர்

சனி, 19 ஜனவரி 2019 (15:43 IST)
கரூர் மாவட்டத்தில் இரண்டு கோடி மதிப்பிலானா தார்சாலை மற்றும் சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.



கரூர் மாவட்டம் கரூர் யூனியனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அதே போல் நெரூர் வடபாகம், தென்பாகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்காக சாலை வாசதி, சாக்கடை வசதி, மேலும் புதிய கட்டிங்கள் கட்டுவற்தகான அடிகல் நாட்டு விழாவை நடைபெற்ற பூமி பூஜையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். இரண்டு கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இந்த நலதிட்ட உதவிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.


 
மேலும் கரூரில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா காதப்பாறை பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு வழங்கினார். அதே போல் கோயம்பள்ளி, மேலம்பாளையம், சேமூர்,காளியப்பகவுண்டனுார் நெரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த,அன்பழகன், வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், கோட்டாச்சியர் சரணவமூர்த்தி உள்ள பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்