மேற்சொன்னதைப்போல ஆப்பிளின் ஐ போன் தொழில்நுட்பத்துக்கே சவால் விடுவதாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வெறும் எட்டாம் வகுப்பு படித்த அப்துல்ரஹ்மான்(26) என்ற இளைஞர் பிறரிடமிருந்து ஐ போனை பறித்த பின் அதில் உள்ள சிம்கார்டை கழற்றி வேறு சிம்கார்டை போடும் போது போனில் உரிமையாளருக்கு செல்லும் குறுஞ்செய்தியின் மூலமாக ஐ போனின் பஸ்வேர்டை பெற்றுகொண்டு அதை புதிய போனாக மாற்றி நூதனமான முறையில் விற்று வந்துள்ளார்.
மேலும் போனை பறிகொடுத்த உரிமையாளர் தனக்கு போன் கிடைக்க வேண்டும் என்ற தவிப்பில் அவரது செல்லுக்கு வரும் குறுஞ்செய்தியில் கேட்கும் கேள்விக்கு ஐ போனுக்கு உரிய பாஸ்வேர்டை கொடுக்க இதை பயன்படுத்தி தான் ஏற்கனவே திருடிவைத்திருக்கும் போன்களை அப்துல்ரஹ்மான் தன் கடையில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதை போலீஸார் தற்போது கண்டுபிடித்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.