வீட்டுச் சுவர்களில் NO CAA, NO NRC, NO NPR என வாசகங்கள்...

திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:34 IST)
கடந்த வருடம் மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல்வேறு தரப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், கோவையில் இஸ்லாமியர் வசிக்கும் பதிகளிகளான உக்கடம்  சாரமேடு மற்றும்  கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு சுவர்களில்  இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கையெழுத்தாக இல்லாமல் பிரிண்ட் செய்த அச்சு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்