சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு..

Arun Prasath

வியாழன், 30 ஜனவரி 2020 (16:19 IST)
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டெல்லி ஜாமியா மில்லையா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென நுழைந்த நபர் துப்பாக்கியை எடுத்து போராட்டக்காரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஷடாப் என்ற மாணவரின் கையில் புல்லட் பாய்ந்ததது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் “ஜெய் ஸ்ரீராம்” என உச்சரித்துவிட்டு “இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் வந்தே மாதரம் என்று உச்சரியுங்கள்” என கூறிவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்