’பாலில் நச்சுத்தன்மை’ என்பது பெரும் ஆபத்து மு.க ஸ்டாலின் ’டுவீட்’
சனி, 23 நவம்பர் 2019 (19:53 IST)
அண்மைக்காலமாக தமிழகத்தில் பாலில் நச்சுத் தன்மை கலந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாலில் நச்சுத் தன்மை கலந்துள்ளது பெரும் ஆபத்து என திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.
இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது :
ஆவின் பாலில் நச்சுத் தன்மை இல்லை. தனியார் பாலில் இருக்கிறதா என அரசு ஆய்வு செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.