தென் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்..! கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..!

Senthil Velan
சனி, 4 மே 2024 (13:02 IST)
தென் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் தென் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று  இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் மிக தீவிரமாக இருக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு கடல் கொந்தளிப்புக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலை சீற்றத்தால் படகை பாதுகாப்பாக நிறுத்தி, எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
 
1.8 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பலாம் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 16 முதல் 23 நொடிகளில் ஒரு அலைக்கு பின் மற்றொரு அலை எழும்பும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்