’தமிழகத்தின்’ இந்த நிலைக்கு அரசுதான் காரணம் - சகாயம் ஐஏஏஸ் அதிரடி
திங்கள், 17 ஜூன் 2019 (16:01 IST)
தமிழகத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் மேலோங்கியுள்ளது. குறுவை சாகுபடிக்குக் கூட காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துவிட்டது டெல்டா விவசாயிகளின் நெஞ்சை வாட்டியது. இந்நிலையில் ஓட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கித் தாகத்தில் நொந்துபோயுள்ளனர்.
ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுதான் மக்களின் தேவை என்ன? மாநிலத்தின் தொலைநோக்குத் திட்டம்! எதில் பற்றாக்குறை உள்ளது ? அந்தப் பற்றாக்குறையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசுப்பணியாற்றும் அதிகாரிகளை முடுக்கவிட வேண்டும்.
அதில்லாமல் 8 ஆண்டுகள் ஆண்டுகள் ஆட்சிசெய்திருக்கும் அதிமுக அரசு தற்போது படாதபாடு படும் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் உள்ளது போல் தண்ணீர் பஞ்சத்துக்கு முன்னெச்சரிக்கையாக முன்னமே அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய வாட்டத்துக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துவருகிறார்.
சென்னையில் நீர் ஆதாரமாக உள்ள அத்துணை ஏரிகளும் பொட்டுத்தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோயுள்ளது. இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மக்கள் இன்று சாலைக்கு வந்து கேட்டுப் போராடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சகாயம் ஐஏஏஸ் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
தமிழகத்தில் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின் மெத்தனமே காரணம். சென்னையைச் சுற்றியுள்ள 1500 ஏரிகளைச் சீரமைக்குமாறு 20 ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்தேன். ஆனால் அரசு அதை சீர் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இனியாவது அரசு விழிப்புடன் இருந்து மக்களுக்கு சேவையாற்றி, அவர்களின் அத்தியாவசியத்தை கிடைக்க வழிவகை செய்யுமாறு அனைத்து மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.