சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் குகனை, வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ரவுடி அகிலனை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி அகிலன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், காவல் உதவி ஆய்வாளர் குகனை வெட்டினார்.
இதில் அவர் காயம் அடைந்த நிலையில், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி அகிலனும் காயமடைந்தார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் குகன் மற்றும் ரவுடி அகிலன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.