எக்கச்சக்கமாய் எகிறிய தக்காளி விலை! பண்ணை பசுமை கடைகளில் விலை குறைவு! - தமிழக அரசு நடவடிக்கை!

Prasanth Karthick
புதன், 9 அக்டோபர் 2024 (08:48 IST)

சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் மழை காரணமாக தக்காளில் சாகுபடி குறைந்த நிலையில் தமிழக சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தக்காளி விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கூடவே சமீபமாக வெங்காயம் விலையும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி மொத்த விலையில் வெங்காயம் கிலோ ரூ.55 வரையிலும், தக்காளில் ரூ.90 வரையிலும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அதன்படி பண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.40க்கும், தக்காளி கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்