திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் புனிதம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை பாதுகாக்கும் நோக்கில், கோயில் வளாகத்திற்குள்ளும் அதை சுற்றியும் சமூக வலைத்தளங்களுக்கான ரீல்ஸ் எடுப்போருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல காணொளிகளில் கோயிலின் புனிதம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை குறைப்பது போன்று உள்ளது. இது லட்சக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்கள் ஒரு ஆன்மிக தலத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவை என்றும் தேவஸ்தானம் கண்டித்துள்ளது.