இனிமேல் வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (14:34 IST)
விபத்துக்களை  தடுக்க சாலைகளை முறையாக பராமரிக்கக்கோரிய வழக்கில் போக்குவரத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சிக்கொடி மற்றும் அமைப்புகளில் கொடியை வாகங்களில் கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மோட்டார் வாகனச்சட்டப்படி வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
 
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசியல்வாதிகள்  தங்களது வாகனத்தில் கட்சிக்கொடி கட்ட சட்டத்தில் அனுமதியில்லை என்றும் வாகனங்களில் தங்கள் பதவியை பெரிதாக எழுதி மாட்டிக்கொள்ளவும் அனுமதியில்லை   என்று தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சாலைகளை முறையாகப் பயனபடுத்த கோரும் வழக்கில் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்