மனைவியிடம் ஆபாசமாக பேசிய நபர்... தட்டிக் கேட்ட கணவர் கொலை !

செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:31 IST)
நாமக்கல் மாவட்டம் நாசிபுரம் அருகே , மனைவியிடன் ஆபாசமாக பேசிய நபர், தட்டிக் கேட்ட பெண்ணி கணவரை குத்திக் கொலை செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் - வசந்தா தம்பதியர். இவர்கள், அங்குள்ள பகுதியில் கட்டிடவேலை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், வீட்டில் கடன் பிரச்சனைகள் இருந்த காரணத்தால், ராமச்சந்திரன் என்பவரை வீட்டுக்கு அழைத்து பரிகார பூனை செய்துள்ளனர். 
 
அப்போது, ராமச்சந்திரன் வசந்தாவின் செல்போன் எண்ணைக் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து வசந்தாவுக்கு போன் செய்து தொல்லை செய்துள்ளார். அதனால் கிருஷ்ணன் போலீஸுக்கு சென்று ராமகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
 
அதனால், கோபம் அடைந்த ராமச்சந்திரன், திங்கட்கிழமை, கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
 
இதில், ராமச்சந்திர தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கிருஷ்ணனைக் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்