ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திருமணம் முடிந்த அடுத்த நாளே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகில் கருடாகாண்டி என்ற கிராமத்தில், தமயந்தி என்ற இளம் பெண்ணுக்கும்,கோபிநாத் சுரேஷ் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை அன்று, லட்சிமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து அடுத்தநாள், பெண் வீட்டில் திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பின், மாமனார் வீட்டுக்குச் செல்ல புதுபெண் தமயந்தி ஆயந்தமானார். அந்த நேரத்தில் அவர் தரையில் சுருண்டு விழுந்தார்.