போக்குவரத்து போலீஸை திட்டி, அடிக்க வந்த ’போதை நபர்’ ! வைரல் வீடியோ

திங்கள், 7 அக்டோபர் 2019 (14:59 IST)
நாளுக்கு நாள் இந்த உலகம் எத்தனை முன்னேற்றம் அடைந்து வந்தாலும் கூட சிலர் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கவே செய்கின்றனர்.சிலர் அஹிம்சை வழியில் நடக்கும் இதே பூமியில் அணுகுண்டை போடுகிறவர்களும் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் அதை மதிப்பதுதான் நியாயம் ! ஆனால் அதை மதிக்காமல் செல்கின்றவர்களை பற்றி என்ன சொல்வது ?
இந்த நாட்டில் உள்ள சட்டத்தை காக்கும் பொறுப்பில் உள்ள போலீஸாரையே ஒருவர் போதையில் வந்து தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
 
சென்னை பாண்டிபஜாரில் ஒரு நபர், அங்குள்ள போக்குவரத்து போலீஸாரை திட்டி, அடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், இரவில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரை, மதுகுடித்து வந்த ஒருவன் வார்த்தைகள் பேசி, அடிப்பதுபோலவும் , திட்டவும் செய்கிறார்.  இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இந்த நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்