இலங்கையில் மனித உரிமை ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்படும் என தகவல் வெளியாகிறது.
இலங்கையில் சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. பெட்ரோல், கியாஸ், உணவுப் பொருட்கள் விலை விண்ணை தொட்டது.. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையும் தாக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார்.
பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது பற்றி முன்னாள் அதிகர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழங்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மனிதஉரிமை ஆணையம் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. பலமுறை ஆஜராகாமல் அவர் தப்பிய நிலையில், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி இந்த வழக்கு சும்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சம்பவன் அனுப்பப்படும் என தகவல் வெளியாகிறது.