சட்டத்தை பின்பற்ற வேண்டும் : ’வாட்ஸ் அப்’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் அறிவுரை

வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (18:47 IST)
உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும் இந்திய சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். காட்சி ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பு இருப்பதைப் போன்று, வலைதளங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் நிலவும் சைபர் குற்றங்களை தடுக்க  சமூக வலைதளங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கவேண்டும் என கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
அதில், தவறாக வழக்கில் பரப்புவதற்கு பொறுப்பேற்க முடியாது என பேஸ்புக்,  டுவிட்டர் ஆப் நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.
 
மேலும், காட்சி ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பு இருப்பதைப் போன்று, வலைதளங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
இதற்கு, சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும் தவறான தகவல்களை பரவுவதை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
அதேசமயம், டுவிட்டர் பேஸ்புக் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தருவதுபோல வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குவதில்லை என அரசு தரப்பு தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்