தம்பித்துரையின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று : அதிமுகவினர் கொந்தளிப்பு

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (17:11 IST)
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வரும் நிலையில்., தமிழக அளவில் ஆங்காங்கே மிகுந்த வேதனையுடன் மனமுறுகி, தெய்வத்தை வேண்டியதோடு, ஆங்காங்கே மண் சோறு, அக்னி சட்டி, பால் குடம், தீர்த்தக் குடம், அக்னி மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். 


 
 
இந்நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் பிரமாண்டமாக ஒரு விழா போல் கொண்டாடியது வெறும் பப்ளிச்சிட்டி என்றும், அவரின் கணவரின் தயவால் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் மட்டுமில்லாமல், அ.தி.மு.க வினரும், உலகெங்கும் வாழும் அம்மாவின் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கும், அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கும் புகார் மேல் புகார் அனுப்பியதோடு, அவரை அந்த எம்.எல்.ஏ பதவிக்கு தேர்ந்தெடுத்த தம்பித்துரையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தம்பித்துரையால் அ.தி.மு.க வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ வாக சில மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீதா, இவர் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்த நிலையில், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையின் சிபாரிசால், முதலில் அ.தி.மு.க வேட்பாளராகவும், பின்பு எம்.எல்.ஏ வாக ஆக்கப்பட்டார். 
 
ஆனால் இந்த கீதா என்பவர் அ.தி.மு.க வில் விருப்ப மனுவும் கொடுக்க வில்லை, அ.தி.மு.க தலைமைக்கும் நேர்க்காணலுக்கும் செல்லவில்லை. ஆனாலும் அவரது பெயர் அடிப்பட்டது என்றால் அதற்கு முழு காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆவார். மேலும் இந்த கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க வின் கோட்டையாக இருந்து வந்தது. காரணம் தமிழக அளவில் அ.தி.மு.க சார்பிலும், அக்கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வர் பெயரிலும் அத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் என்பவர் 2011 முதல் 2016 கடைசி வரை தனது 60 மாதம் சம்பளத்தொகைகளை ஹெச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், விவசாயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், முற்றிலும் ஊனமுற்றவர்கள் மட்டுமில்லாது கல்வி, விளையாட்டு என்று பலதரப்பட்ட உதவித்தொகைகளை மாதம், மாதம் ரூ 55 ஆயிரத்தை தானமாக கொடுத்து வந்தார்.  ஆனால் அவரை தம்பித்துரை ஒதுக்கினார். 
 
இந்நிலையில் அவர், தன்னை வேட்பாளராக அறிவிக்காத பட்சத்திலும் கூட, அம்மாவினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
மேலும்   கடந்த சட்டமன்ற தேர்தலில் கீதாவை (அதாவது இரட்டை இலை சின்னத்தை) எதிர்த்து தி.மு.க சின்னம் இல்லாமல், தி.மு.க வின் கூட்டணியான புதிய தமிழகம் கட்சி நின்றது. அதற்கு சின்னமும் தொலைக்காட்சி சின்னமும் என்பதால் தொலைக்காட்சி சின்னம் என்பது ஒரு சுயேட்சை சின்னமாக எண்ணி பலரும், உதய சூரியன், இரட்டை இலை என்ற பாணியில் ஒட்டுப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னமும், மற்ற சின்னங்களான தி.மு.க கூட்டணியின் தொலைக்காட்சி, மக்கள் நல கூட்டணியின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென்னந்தோப்பு சின்னம் என்று பல்வேறு சின்னங்கள் இடம்பெற்றிருந்ததால் பலரும் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்குப்பதிவு அளித்தனர். 
 
இது அப்பகுதி மக்களின் ஒரு மித்த கருத்தாகும், வாக்களித்து வெளியே வந்தவர்கள் எங்கே நமது உதய சூரியன் சின்னத்தை காணவில்லை என்று கேட்டதற்கு, தி.மு.க கூட்டணியில் தான் தொலைக்காட்சி சின்னம் என்று சொல்லி பெருமளவு மக்கள் வேதனையுடன் வீடு திரும்பினராம். 


 
 
இந்நிலையில் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையின் செல்வாக்கில் அமைச்சர் பதவிக்கும் கீதா பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க வின் தலைமை சுதாரித்து கொண்டது. ஒரு நேர்காணலுக்கும் வராமல், விருப்ப மனு கொடுக்காமல் ஒரு எம்.எல்.ஏ வாக மாற்றியதோடு, அவருக்கு அமைச்சர் பதவியுமா? என்று எண்ணிய தலைமை, கரூர் முன்னாள் மாவட்ட செயலாளாராக சில மாதங்களாக இருந்து மீண்டும் அதே தம்பித்துரையால் பதவி பறிக்கப்பட்ட, கரூர் எம்.எல்.ஏ வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, அதே தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ  வும், அ.தி.மு.க வின் செல்லப்பிள்ளையாக விளங்கி வந்த செந்தில் பாலாஜியின் அதே போக்குவரத்து துறையை அளித்தது. 
 
மேலும், கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கொடுக்க சிபாரிசு செய்யாமல், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுக்க சிபாரிசு என்றால் ஒ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாணியில் தனி அரசியல் அ.தி.மு.க வில் செய்வதற்காகவா என்று கருதி, குறைந்த வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது. 
 
இந்நிலையில் கீதாவை அத்தொகுதியில் காணவில்லை என்று பலரும் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்க, அது பற்றி எந்த வித சலசலப்பும் இல்லாமல் அமைதி காத்து வந்தார். 
 
இந்நிலையில் ஏற்கனவே இத்தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தனது மாதம், மாதம் சம்பளத்தொகையினை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து வந்த நிலையில், தாங்களும் எதாவது தருகின்றார்களா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் விளம்பர பிரியத்திற்காக அம்மாவின் (முதல்வர் ஜெ) பெயரில், கொடுத்துள்ளார். நான் கொடுக்க வேண்டுமென்று தலைவிதியா  என்று சாடினார். 
 
மேலும் இவரை பற்றி மேலும் மேலும் சர்ச்சைகள் வளர்ந்தது. என்னவென்றால் நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவரான மணிவண்ணன் இவரது கணவர் ஆவார். முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி இவர் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி இவரை பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும் கடந்த 2011 ம் வருடம் உள்ளாட்சி தேர்தலில் இவர் போட்டியிட்ட போது, இவரது பெயர் கீதா மணிவண்ணன், ஆனால் தற்போது அம்மா (முதல்வர் ஜெயலலிதா) நமது பெயரை வேட்பாளர் லிஸ்டில் கொடுத்து விட்டார் என்பதற்காக கீதா மணிவண்ணன் என்ற பெயரை கடந்த சட்டமன்ற தேர்தலில் கீதா என்றே கூறி வாக்குகள் கேட்டார். ஏனென்றால் முறைகேடு விஷயத்தை மீடியாக்கள் ஊதி பெரிசாக்க வில்லை. 
 
இந்நிலையில் ஆங்காங்கே தேர்தலின் போது வாக்குகள் கேட்டு செல்லும் போது இவரது கணவர் எங்கும் செல்ல மாட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்ப்பார். பின்னர் தேர்தலின் முடிவு போது, வாக்கு எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் முதல் வித்தியாசம் என்ற கூறியவுடன் கணவர் மணிவண்ணனும், அப்போது வேட்பாளராகவும், தற்போது எம்.எல்.ஏ வாக இருந்து வரும் கீதாவும் வாக்கு எண்ணும் இடத்திலேயே ஜோடி போட்டி சுற்றினர். 
 
இதுவும் இங்குள்ள அ.தி.மு.க வினருக்கு தெரிய  அவர்களுக்கே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டதாம். பல அ.தி.மு.க வினருக்கும், பொதுமக்களுக்கும் பிடிக்க வில்லை. மேலும் முதல்வர் ஜெயலலிதா வின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இன்று அவரது சார்பில் அதாவது கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ சார்பில் நெரூர் காவிரி ஆற்றிலிருந்து பால் குடம், தீர்த்தக்குடங்கள் எடுத்து அதே பகுதியில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு ஊர்வலமாக வருவதாக விழாக்கோலம் போல் கொண்டாடி மீண்டும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். 
 
அம்மாவின் (முதல்வர் ஜெயலலிதா) நிலையை தெரிந்து யாரும் விளம்பரம் செய்யாமல் ஆங்காங்கே நூதன நேர்த்திக்கடன்களையும், தீச்சட்டி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், மண் சோறு சாப்பிட்டல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ வின் கணவர் மணிவண்ணன் எனது மனைவியும், எம்.எல்.ஏ வுமான கீதா தலைமையில் அம்மா நலம்பெற வேண்டி 1008 பால்குடம், தீர்த்தக்குடம் எடுக்கப்போவதாக ஆட்டோ விளம்பரம், டி.வி விளம்பரம் பிளக்ஸ் விளம்பரம் என்று ஒரு புறம் விளம்பரமாக செய்து வந்த நிலையில்., தாரை தப்பட்டை முழங்கவும் சண்டி மேளம் முழங்கவும் இரண்டு யானைகள் கொண்டு ஒரு விழாபோல் கொண்டாடிய சம்பவம் இங்குள்ள அ.தி.மு.க வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
 
இந்த விஷயம் சென்னையில் முதல்வர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை வரை சென்றுள்ளதாம், ஏற்கனவே கணவர் பஞ்சாயத்து தலைவர் பதவி சர்ச்சை, கணவர் பெயர் சர்ச்சை, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்காமல், அதை அப்படியே மறைத்த சர்ச்சை என்று சர்ச்சை மேல் சர்ச்சையில் ஈடுபட்டு வரும் இந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா, அம்மாவின் உடல் நிலை இப்படி இருக்கும் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், யானைகள் புடை சூழ, இது என்ன திருவிழாவா என்று இதுவும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அதுமட்டுமின்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான  எம். ஆர். விஜயபாஸ்கரையும் இந்த சம்பவத்தில் மாட்டி விட்டது மேலும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளதாம்,  இதனால், அ.தி.மு.க வினர் பலர் புலம்புவதோடு, முதல்வர் உடல் நிலை குறித்து கருத்து பேஸ்புக் வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் கைது செய்யும் காவல்துறை, இந்த எம்.எல்.ஏ விழா போல் கொண்டாடியுள்ளாரே இவரை எல்லாம் என்ன செய்யப்போகின்றது என்று நடுநிலையாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த எம்.எல்.ஏ வின் பதவிக்கு காரணமான அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகரின் உத்திரவின் பேரில் இப்படி எதையாவது செய்துள்ளாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. 

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்