கரூர் வழியாக கோவைக்கு 12 வழிச்சாலை பணிகள் மும்முரம் - தம்பிதுரை பேட்டி

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (18:24 IST)
திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12-வழிச்சாலை அமைப்பதற்க்கான அளவீடுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

 
கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியர் ஊராட்சி நஞ்சை புகளூர் ஊராட்சி திருக்காட்டுதுறை கோம்பு பாளையம் வேட்டமங்களம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறை கேட்கும் நிகழ்ச்சி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அந்தந்த பகுதியில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில்  ரூபாய் சுமார் 35-லட்சம் மதிப்பீட்டில் கிராம தார்சாலை அமைக்கும் பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைக்கவும் வந்தனர். 
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் மாவட்டத்தில்  கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகள் கேட்டு தீர்க்க அதிகாரிகளுடன் வந்துள்ளோம். நேற்று கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றோம் இன்று மாலை அரவக்குறிச்சி பகுதிகளில் மக்களிடம் மனுக்கள் பெற உள்ளோம். தமிழக முதலமைச்சரின் ஆலோசனை பெயரிலேயே தொடர்ந்து மக்களின் குறைகள் அறிந்து அதனை தீர்க்கவே வந்துள்ளோம். தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்வோம் என்றார்.
 
மேலும், கரூருக்கு சிறிய அளவிலான திட்டங்கள் மட்டுமல்லாது பெரிய அளவிலான திட்டங்களும் செயல்படுத்துவதற்க்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார். 
 
பேட்டி: தம்பிதுரை -மக்களவை துணை சபாநாயகர்
 
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்