ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை - தம்பிதுரை நக்கல் (வீடியோ)

சனி, 2 ஜூன் 2018 (15:45 IST)
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது கட்சி அலுவலகத்தில் போட்டி சட்டமன்றத்தினை நடத்தியது விளையாட்டுத்தனமானது என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டியளித்துள்ளார். 

 
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் இன்று நேரில் சென்று அந்த பணிகள் ஆய்வு மேற்கொண்டார். 
 
இந்த ஆய்வினையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், கர்நாடகா அரசிற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரம் கிடையாது. அந்த விஷயம் தான் கெஜட் நோட்டிப்பிகேஷனில் வந்துள்ளது என்றார். அப்போது, ஒரு செய்தியாளர், காவிரி மேலாண்மை வாரியமா? காவிரி மேலாண்மை ஆணையமா? என்று கேள்வி கேட்டதற்கு எதுவாக இருந்தால் என்னங்க, என்று அப்படியே பதில் அளித்த தம்பித்துரை, நமக்கு அதிகாரம் எங்கு இருக்கின்றதோ, அங்கு தண்ணிர் திறந்து விட வேண்டியது தானே என்றார். 
 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, உடனடியாக அதை அமல்படுத்திய, மத்திய அரசிற்கும், மோடி அரசிற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். 
 
மேலும், சட்டமன்றம் என்பது ஒன்று தான், அது சென்னையில் தான் உள்ளது, ஆகவே. விளையாட்டு தனமாக நடத்துவது போட்டி சட்டமன்றம் கிடையாது., அது போட்டி சட்டமன்றம் என்று ஊடகங்கள் கூறுவது தவறு. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கடமைகளை ஆற்றுவதற்காக, கண்டிப்பாக சட்டமன்றம் வருவார்கள், ஆகவே, ஜெயின் சார்ஜ் கோட்டையில் உள்ளது தான், ஆகவே, விளையாட்டுதனமாக சட்டமன்றம் நடத்துவது நகைச்சுவையாக இருக்கின்றது எனக் கூறினார்.
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்