தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

Siva

வியாழன், 27 மார்ச் 2025 (08:56 IST)
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவிலும், கலங்கரை விளக்கத்திலிருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை உயர்நீதிமன்றம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கும் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கைகளை தயாரிக்க தேசிய அளவிலான ஆலோசனை நிறுவனத்திடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த பாதையின் மொத்த நீளம், ரயில் நிலையங்கள், செலவுத்தொகை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்.
 
மேலும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கக்கூடிய அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் (167 கிமீ), சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் (140 கிமீ), கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் (185 கிமீ) ஆகிய முக்கிய வழித்தடங்களில் இந்த சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த மூன்று பாதைகளிலும் விரைவான ரயில் சேவையை செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய ஒப்பந்த ஆலோசகர்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நியமிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்த முழுமையான ஆய்வுகள் முடிந்தவுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்