சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Prasanth Karthick

வெள்ளி, 21 மார்ச் 2025 (08:27 IST)

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வரும் நிலையில் பூந்தமல்லி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.

 

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவையை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் பணிகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழித்தடத்தில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது

 

ஆரம்பத்தில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து பழுது ஏற்பட்ட நிலையில் பணியாளர்கள் பழுதை சரிசெய்து வந்ததால் சோதனை ஓட்ட பணி தாமதமானது. பின்னர் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து முல்லைத் தோட்டம் வரையில் 2.5 கி.மீ தொலைவிற்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

 

இதுகுறித்து பேசிய மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக், வரும் டிசம்பர் மாதத்தில் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார். இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

 

 

 

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்