30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது.. கைதானவர்களின் மனைவிகளும் கைது..!

Siva

வெள்ளி, 4 ஜூலை 2025 (07:51 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இரண்டு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது மனைவிகளும் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாசவேலைகளில் ஈடுபட்ட அபுபக்கர் மற்றும் முகமது அலி ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் துணி வியாபாரம் செய்வது போல நடித்துக்கொண்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கைதான அபுபக்கரின் மனைவி ஷேக் ஹைரா பானு மற்றும் முகமது அலியின் மனைவி ஷேக் ஷமீம் ஆகியோரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று அதன்பின் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியபோது, வெடிகுண்டுகள் உட்பட பல ஆபத்தான ஆயுதங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்