கள்ளக்காதலியுடன் உல்லாசம்! கணவனை கடப்பாரையால் பிளந்த இரண்டாவது மனைவி!

Prasanth K

வியாழன், 3 ஜூலை 2025 (09:50 IST)

கடலூரில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி கடப்பாரையால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள இந்திராநகரில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன். கொளஞ்சியப்பனின் முதல் மனைவி 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் பத்மாவதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். என்.எல்.சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கொளஞ்சியப்பன் தற்போது துணிக்கடை ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொளஞ்சியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் பத்மாவதிக்கு தெரிய வந்த நிலையில் கொளஞ்சியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

 

ஆனால் அதையும் மீறி கள்ளக்காதலில் ஈடுபட்ட கொளஞ்சி தனது பெயரில் உள்ள வீட்டையும் கள்ளக்காதலிக்கு எழுதி வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மாவதி, கொளஞ்சி தூங்கிக் கொண்டிருந்தபோது கடப்பாரையை எடுத்து தலையில் ஒரே குத்தாக குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பத்மாவதியை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்